நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நாசர். தனது தனித்துவமான நடிப்பு, நம்பிக்கையான குரல், மிகுந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து மிகுந்த கவனம் பெற்றுள்ள இவர், தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு உயிரூட்டும் வல்லமை கொண்ட அவர், தமிழ் சினிமாவின் மகா நடிகராகவும் பாராட்டப்படுகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது அதே பொறுப்பில் பணியாற்றி வரும் நாசர், சமூக மற்றும் அரசியல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் விருது மற்றும் இசை, நாட்டிய விழா இன்று நடைபெற்றது. இதில், விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார். இதில், திரைப்படங்களில் நடித்து, கதாசிரியர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களை எட்டிய நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், முத்தமிழ்ப் பேரவையின் இசை விழாவில் கலந்து கொண்டு கலைஞர் விருதினை நடிகர் திரு.எம்.நாசர் அவர்களுக்கும், ராஜரத்னா விருதினை வடுவூர் திரு.எஸ்.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், (1/3) pic.twitter.com/5XzACukrgMஇதேபோன்று இசை, நடனம் என பல துறைகளில் சிறந்த விளங்கியவர்களுக்கு முதல்-அமைச்சர் விருது வழங்கினார். நாதஸ்வர கலைஞர் வடுவூர் எஸ்.என்.ஆர். மூர்த்திக்கு ராஜரத்னா விருது வழங்கப்பட்டது. நகைச்சுவை தென்றல் என்ற பட்டம் பெற்ற புலவர் சண்முக வடிவேலனுக்கு இயல் செல்வம் விருது வழங்கப்பட்டது. கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி வெங்கடராமனுக்கு இயல் செல்வம் விருது அளிக்கப்பட்டது. நடனக் கலைஞர் அனிதா நாட்டிய சேவையை பாராட்டி நாட்டிய செல்வம் விருது வழங்கப்பட்டது. டிகேஆர் ஐயப்பன், டிகேஆர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு நாதஸ்வர செல்வம் விருது வழங்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தவில் உதவி பேராசிரியராக உள்ள நாகூர் செல்வகணபதிக்கு தவில் செல்வன் விருது வழங்கப்பட்டது. மிருதங்க கலைஞர் தஞ்சை முருகபூபதிக்கு மிருதங்கச் செல்வன் விருது வழங்கப்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
