“பராசக்தி” படத்தில் பாடல் பாடிய சிவகார்த்திகேயன்

  தினத்தந்தி
“பராசக்தி” படத்தில் பாடல் பாடிய சிவகார்த்திகேயன்

சென்னை, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. முதல் பாடலான ‘அடி அலையே’ , 2வது பாடலான ‘ரத்னமாலா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் ‘பராசக்தி’ திரைப்படத்தின் 3-வது பாடலான. ‘நமக்கான காலம்’ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் 'தரக்கு தரக்கு' பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார்.#SK sings for #parasakthi the rebel song #tharakkutharakku @Siva_Kartikeyan @Sudha_Kongara @DawnPicturesOff pic.twitter.com/1TZ6Yp7Ooa

மூலக்கதை