ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி
துபாய், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (ஜூனியர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் 49.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக உஸ்மான் சதாத் 52 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் சேத்மிகா செனவிரத்ன மற்றும் டல்னித் சிகேரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. மிடில் ஆர்டரில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் சாமிக ஹீனடிகல (51 ரன்கள்) பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் அடித்த இலங்கை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விரான் சாமுதிதா 62 ரன்கள் அடித்தார். இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம் - நேபாளம் அணிகள் மோதின. இதில் வங்காளதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
