ஐ.பி.எல்.: ஏல வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார் - யார் தெரியுமா..?
சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 18 சீசன்களை வெற்றிகரமாக கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் டி20 கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் கடந்த 2008-ம் ஆண்டு இந்த தொடங்கப்பட்ட இந்த தொடர் உலகளாவிய லீக் தொடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதன் 18-வது சீசன் கடந்த வருடம் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து இந்த தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலம் நாளை (16-ந் தேதி) அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பித்தன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன. வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்கள் உட்பட, மொத்தம் 77 வீரர்களை அணிகள் தேர்ந்தெடுக்க இந்த ஏலத்தில் போட்டியிட உள்ளார்கள். இந்நிலையில் இதுவரை நடைபெற்றுள்ள ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் குறித்து இங்கு காணலாம்..! 1. மகேந்திரசிங் தோனி - 2008-ம் ஆண்டு - ரூ. 9.5 கோடி 2. கெவின் பீட்டர்சன்/ பிளிண்டாப் - 2009-ம் ஆண்டு - ரூ. 9.8 கோடி 3. ஷேன் பாண்ட்/ கீரன் பொல்லார்டு - 2010-ம் ஆண்டு - ரூ. 4.8 கோடி 4. கவுதம் கம்பீர் - 2011-ம் ஆண்டு - ரூ. 14.9 கோடி 5. ரவீந்திர ஜடேஜா - 2012-ம் ஆண்டு - ரூ. 12.8 கோடி 6. கிளென் மேக்ஸ்வெல் - 2013-ம் ஆண்டு - ரூ. 6.3 கோடி 7. யுவராஜ் சிங் - 2014-ம் ஆண்டு - ரூ. 14 கோடி 8. யுவராஜ் சிங் - 2015-ம் ஆண்டு - ரூ. 16 கோடி 9. ஷேன் வாட்சன் - 2016-ம் ஆண்டு - ரூ. 9.5 கோடி 10. பென் ஸ்டோக்ஸ் - 2017-ம் ஆண்டு - ரூ. 14.5 கோடி 11. பென் ஸ்டோக்ஸ் - 2018-ம் ஆண்டு - ரூ. 12.5 கோடி 12. ஜெய்தேவ் உடன்கட்/ வருண் சக்ரவர்த்தி - 2019-ம் ஆண்டு - ரூ. 8.4 கோடி 13. பேட் கம்மின்ஸ் - 2020-ம் ஆண்டு - ரூ. 15.5 கோடி 14. கிறிஸ் மோரிஸ் - 2021-ம் ஆண்டு - ரூ. 16.25 கோடி 15. இஷான் கிஷன் - 2022-ம் ஆண்டு - ரூ. 15.25 கோடி 16. சாம் கர்ரன் - 2023-ம் ஆண்டு - ரூ. 18.5 கோடி 17. மிட்செல் ஸ்டார்க் - 2024-ம் ஆண்டு - ரூ. 24.75 கோடி 18. ரிஷப் பண்ட் - 2025-ம் ஆண்டு - ரூ. 27 கோடி 19 ??? - 2026-ம் ஆண்டு




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
