நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் - ஹங்கேரியில் நடந்த நூதன கொண்டாட்டம்
புடாபெஸ்ட், உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்படுகிறது. இதற்கு ஏற்றவாறு அங்குள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைநகர் புடாபெஸ்ட்டில் நூதன முறையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. அந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் நீச்சல் உடைகளில் கிறிஸ்துமஸ் தாத்தா போல் வித்தியாசமாக வேடமணிந்திருந்தனர். கடுமையான குளிரில் இத்தகைய உடையணிந்து அவர்கள் உற்சாகமாக மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். செல்லும் வழியில் குழந்தைகளுக்கு இனிப்புகள், மிட்டாய்களை வழங்கினர். குளிருக்கு நடுவே உடலின் வெப்பத்தை தக்கவைப்பதற்காக ஆங்காங்கே கூட்டமாக நின்று உடற்பயிற்சிகளை செய்தனர். அதோடு, பண்டிகையை வரவேற்கும் விதமாக கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியும், நடனமாடியும் மகிழ்ந்தனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
