ராகுல் காந்தி குறித்து சோனியாவிடம் புகார் அளித்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்
புவனேசுவரம், - ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் வலிமை இழந்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசிய தலைவருமான சோனியா காந்திக்கு, ஒடிசாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது மொகிம் என்பவர் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். கட்சியின் தலைமைக்கும், அடிமட்ட தொண்டர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவேளை இருப்பதாகவும், 83 வயதான கார்கேவால் இளைய சமுதாயத்தினருடன் இணைந்து செயல்பட முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாகவே, ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமாந்த பிஸ்வா சர்மா போன்ற இளம் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும், தொடர்ச்சியான தவறான முடிவுகள், மோசமான தலைமையும், பொறுப்பான பதவிகளை தகுதியற்றவர்களுக்கு வழங்கியதுதான் காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று வெளிப்படையாக குற்றம்சாட்டி இருந்தார்.மேலும் பொதுவெளியில், தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் தலைமை குறித்து விமர்சித்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முகமது மொகிம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
