ஆபரேஷன் சிந்தூர்: சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோனை முதல் முறையாக காட்சிக்கு வைத்த இந்திய ராணுவம்
புதுடெல்லி, காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய திடீர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் மாற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு ராணுவங்கள் இடையே மோதல் வெடித்தது. பின்னர், இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப்பின் மோதல் முடிவுக்கு வந்தது. இந்த மோதலின்போது பாகிஸ்தான் ராணுவம் ஏவிய அனைத்து டிரோன்களையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ‘YIHA’ என்ற டிரோன் ஒன்றை முதல் முறையாக இந்திய ராணுவம் காட்சிக்கு வைத்துள்ளது. டெல்லியில் உள்ள ராணுவ தளபதியின் இல்லத்தில் இந்த டிரோன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த டிரோன் துருக்கியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த டிரோனை சுமார் 10 கிலோ வெடி பொருட்களுடன் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் இருந்து பஞ்சாப்பில் இருக்கும் ஜலந்தர் பகுதியை நோக்கி கடந்த மே 10-ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் ஏவியது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த டிரோனை அமிர்தசரஸ் அருகே சுட்டு வீழ்த்தியது. கீழே விழுந்த டிரோனை இந்திய ராணுவ அதிகாரிகள் கைப்பற்றி, அதன் பாகங்களை ஒருங்கிணைத்து தற்போது காட்சிக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
