‘அகண்டா 2’ படத்தை பார்க்க பிரதமர் மோடி ஆர்வம்- இயக்குநர் போயபட்டி சீனு
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த 12ந் தேதி வெளியான படம் ‘அகாண்டா 2’ . இந்த படத்தை இயக்குநர் போயபடி ஸ்ரீனு இயக்கியுள்ளார். இதில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஆதி பினிசெட்டி, கபீர் துல்ஹன் சிங், சாஸ்வதா சட்டர்ஜி, அச்யுத் குமார், பூர்ணா, ஹர்ஷா, ஜெகபதி பாபு, ராச்சா ரவி, ஐயப்பா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று வருகிறது. இப்படம் பாலய்யாவின் கெரியரில் மிகச்சிறிந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அகண்டா 2 படம் குறித்து சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, நடிகர் பாலய்யாவின் 'அகண்டா 2' படத்தை பிரதமர் மோடி பார்க்கவுள்ளதாக அதன் இயக்குநர் போயபட்டி சீனு கூறியுள்ளார். 'அகண்டா 2' படம் குறித்து பிரதமர் மோடி கேள்விப்பட்டு, “இவ்வளவு நல்ல படத்தை நாமும் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்" என கூறி, திரைப்படத்தை பார்க்க முடிவு செய்துள்ளதாக போயபட்டி சீனு தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
