கர்நாடகா: இந்து மதம் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட இளைஞர் விமான நிலையத்தில் கைது
பெங்களூரு,கர்நாடக மாநிலம் மங்களூரு உலைபெட்டு பகுதியை சேர்ந்த இளைஞர் அப்துல் காதர் நிகத் (வயது 27). இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே, சவுதியில் இருந்தவாறு அப்துல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்து மதம் குறித்து அவதூறு கருத்து, வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இது தொடர்பாக மங்களூரு போலீசில் அப்துல் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அப்துல் நேற்று சவுதி அரேபியாவில் இருந்து கேரளா வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த மங்களூரு போலீசார் உடனடியாக இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், கோழிக்கோடு விமான நிலையத்தில் அப்துல் காதரை கைது செய்தனர். இதையடுத்து, அப்துல் காதரை மங்களூரு போலீசார் கர்நாடகாவுக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
