சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி
டெல்லி,இந்திய சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வல்லபாய் பட்டேல். இவர் நாட்டின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். இதனிடையே, குஜராத்தின் நடியாட் பகுதியில் 1875ம் ஆண்டு பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் 1950ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 75வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினத்தில் அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேலின் 75வது நினைவு தினத்தில் அவரை போற்றுவோம். அவர் இந்தியாவை ஒன்றிணைக்க தனது வாழ்வை அர்ப்பணித்தார். ஒருங்கிணைந்த, வலிமையான இந்தியா உருவாக மாபெரும் பங்களித்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நாடு கடமைபட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
