தேர்தல் பிரசாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்தோம் - செல்வப்பெருந்தகை பேட்டி
புதுடெல்லி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்று டெல்லியில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு ஆலோசனை கூட்டம் தேர்தல் சம்பந்தமாக நடைபெற்றது. தலைவர் ராகும் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோரின் தமிழ்நாடு வருகை இது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறோம். தேர்தல் பிரசாரம், தேர்தல் மாநாடு, கிராம கமிட்டி தலைவர்கள் சந்திப்பு. தேர்தலின் உத்திகளை ஒரு புரிதலோடு பேசி முடித்திருக்கிறோம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு டெல்லியில் அகில இந்திய தலைவருடன் கூட்டம் நடக்க இருந்தது. இன்று அவருடன் நடக்க இருந்த கூட்டம் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேர்தல் குறித்து விவாதித்தோம். இந்த கூட்டத்தில் எப்படி வரப்போகும் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது குறித்து ஆலோசித்தோம். இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. திமுக உடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எத்தனை முணை போட்டி வந்தாலும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெரும். இந்தியா கூட்டணி 45 விழுக்காடு வாக்கு வங்கியுடன் வலிமையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
