வரதட்சணையாக ரூ. 20 லட்சம் கேட்ட மணமகன்; கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஜோதி. இவருக்கும் தொழில் அதிபரான ரிஷப் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரதட்சணையாக மணமகள் குடும்பத்தினர் திருமண நிச்சயதார்த்தத்தின்போது ஏற்கனவே தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஜோதி, ரிஷப் திருமணம் நேற்று முன் தினம் நடைபெற இருந்தது. திருமணம் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கூடுதல் வரதட்சணை தந்தால் தான் திருமணம் நடக்கும் என்று மணமகனும் அவரது குடும்பத்தினரும் கூறியுள்ளனர். அதன்படி, கூடுதலாக ரூ. 20 லட்சம் பணமும், சொகுசு காரும் வரதட்சணையாக கொடுக்க வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர். கூடுதல் வரதட்சணை தரவில்லையென்றால் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த மணப்பெண் ஜோதி மணமகன் ரிஷப்பை திருமணம் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார். ரிஷப் தனது குடும்ப உறுப்பினர்களை அவமதிப்பதாகவும், கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும் கூறி ஜோதி திருமணத்தை நிறுத்தினார். திருமணத்திற்கு சில மணிநேரம் இருந்த நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
