இரவு முழுவதும் துப்பாக்கி சூடு; தாய்லாந்து-கம்போடியா எல்லையில் நீடிக்கும் பதற்றம்
பாங்காக், தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதி கொண்டனர். இதில் கம்போடியா ராணுவ வீரர் உயிரிழந்தார். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது. கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்த போரில் 48 பேர் உயிரிழந்தனர். இரு நாட்டு எல்லையில் இருந்தும் சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த போரின்போது எல்லையில் கண்ணிவெடிகள் நிலத்தில் பதித்து வைக்கப்பட்டன. 5 நாட்கள் நடந்த போர் பேச்சுவார்த்தைக்குப்பின் முடிவுக்கு வந்தது. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தாய்லாந்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டிராட் மாகாணத்தில் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இதன் மூலம் தாய்லாந்து-கம்போடியா இடையிலான எல்லை பிரச்சினை கடலோர பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதனை தொடர்ந்து டிராட் மாகாணத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருதரப்பும் சண்டையை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், துப்பாக்கி சூடு காரணமாக தாய்லாந்து-கம்போடியா எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
