மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்கும் 'காதல்' பட நடிகை
கடந்த 2004-ம் ஆண்டு வெளியான காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் சந்தியாவையும் சினிமா உலகில் உச்சத்துக்கு கொண்டு சென்றது. முதல் படத்திலேயே அசாத்தியமான நடிப்பை கொடுத்த சந்தியா டிஸ்யூம், வல்லவன் உள்பட பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த சந்தியா கடந்த 2015-ம் ஆண்டு சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இருக்கின்றனர் .திருமணத்திற்கு பின்பு சினிமாவிலிருந்து விலகி இருந்த சந்தியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமா நடிப்புக்கு திரும்பியுள்ளார் . முதற்கட்டமாக வெப் தொடர் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் காதல் சந்தியா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. தொடரில் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க பாடினி குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஒரு புதிய படத்தில் காதல் சந்தியாவை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
