அஜித்தின் 'ஏகே 64' படத்தில் இணையும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?
சென்னை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, திரிஷா என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றி தொடர்ந்து மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக "ஏகே 64" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.இந்த நிலையில், "ஏகே 64" திரைப்படத்தில் நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் முன்னணி நடிகையான ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே அஜித்துடன் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
