கியூபா தலைநகரின் 506-வது ஆண்டு கொண்டாட்டம் - 42 கி.மீ. ஸ்கேட்டிங் மாரத்தானில் அசத்திய சிறுவர்கள்
ஹவானா, கரீபியன் நாடுகளில் ஒன்றான கியூபாவின் தலைநகர் ஹவானாவின் 506-வது ஆண்டு நிறைவு தினம் கடந்த நவம்பர் 16-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஹாவானாவின் 506-வது ஆண்டை கொண்டாடும் வகையில் அந்நகரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஹவானா நகரின் கடற்கரை சாலையில் மாபெரும் ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் பங்கேற்று ஸ்கேட்டிங் செய்து அசத்தினர். சுமார் 42 கி.மீ. தூரத்தை இலக்காக கொண்டு இந்த ஸ்கேட்டிங் மாரத்தான் நடத்தப்பட்டது. இதனை கண்டு ரசித்த பார்வையாளர்கள், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். ஸ்கேட்போர்டிங், ஸ்பின்னிங், ஸ்கேட்கிராஸ் மற்றும் ஸ்பீட்ஸ்கேட்டிங் உள்ளிட்ட பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
