இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு
காத்மாண்டு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் பொருளாதாரம், சுற்றுலா வருவாயை நம்பியே உள்ளது. அந்த நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா வருவாயாக இந்திய சுற்றுலா பயணிகள் இருந்து வருகின்றனர். அங்கு இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவது அமலில் இருந்தநிலையில் 2016-ம் ஆண்டுக்கு பின்னர் அதற்கு தடைவிதிக்கப்பட்டது.ரூ.100 மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் கீ்ழான மதிப்புடைய காசுகள் ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. அதுவும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள சில திருத்தங்களையடுத்து, இந்திய ரூபாய்களை மீண்டும் அனுமதிக்க நேபாள மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இதன்படி, ரூ.100 மற்றும் அதற்கு மேல் மதிப்புடைய ரூ.200, ரூ.500 இந்திய பணநோட்டுகளை பயன்படுத்தி நேபாளத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
