சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை; டிரம்ப் சூளுரை
வாஷிங்டன் டி.சி., சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் அமெரிக்க உரைபெயர்ப்பாளர் ஒருவர் என 3 பேர் பலியானார்கள். 3 வீரர்கள் காயமடைந்தனர். இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, எங்கள் மீதும், சிரியா மீதும் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடுத்த தாக்குதல் இது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றோம். அவர்களுக்காகவும், அவர்களின் பெற்றோர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகவும் நாங்கள் வேண்டி கொள்கிறோம் என கூறினார். இதற்கு நாங்கள் பதிலடி தருவோம் என டிரம்ப் சூளுரைத்து உள்ளார். காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய தனிநபர் ஒருவர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டு விட்டார். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷரா, வெள்ளை மாளிகையில் சில வாரங்களுக்கு முன் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
