அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்
ரோடு ஐலேண்ட், அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் மாகாணத்தில் பிராவிடென்ஸ் பகுதியில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் மாணவ மாணவிகள் உள்பட பலரும் அலறியடித்து ஓடினார்கள். எனினும், இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடைய நிலைமை சீராக உள்ளது. சம்பவம் பற்றி அறிந்து அந்த பகுதிக்கு சென்று, நிலைமையை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரவுன் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் அனைவரும் அந்த பகுதியை தவிர்க்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். பலியானவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து வருகிறது. இதுபற்றி பிராவிடென்ஸ் துணை காவல் அதிகாரி டிம் ஓஹரா கூறும்போது, கருப்பு உடையில் வந்த ஆண் ஒருவர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கிறார் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த நபர் எப்படி பல்கலைக்கழகத்தின் உள்ளே நுழைந்துள்ளார் என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. எனினும், ஹோப் ஸ்ட்ரீட் வழியே அவர் தப்பி சென்றுள்ளார் என உறுதியாக கூறினார். அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் பள்ளிகளில் 70-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
