தோல்வியுடன் விடைபெற்றார் ஜான் சீனா
கடந்த 2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமாகி, தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜான் சீனா. 'தி சூசைட் ஸ்குவாட்', 'ப்ரீலான்ஸ்' உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஜான் சீனாவின் என்ட்ரி இசை பலரது ரிங்டோனாக இருந்தது. இவர் WWE மல்யுத்த போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். WWE ஜாம்பவான்களான ராக், டிரிபிள் எச், ரேண்டி ஆர்ட்டன், அண்டர்டேக்கர் உள்ளிட்டோருடன் ஜான் சீனா மோதியுள்ளார். 23 ஆண்டுகளாக WWE மல்யுத்த போட்டிகளில் அசத்தி வந்த ஜான் சீனா சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். அமெரிக்காவில் டிசம்பர் 13-ந்தேதி நடைபெறும் போட்டிதான் தனது கடைசி போட்டி என்று கூறியிருந்தார். இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 14) காலை 6.30 மணிக்கு இந்த போட்டியின் நேரலை ஒளிபரப்பானது. அதன்படி தனது கடைசி போட்டியில் ஜான் சீனா, கன்தர் உடன் மோதினார். இந்த போட்டியில் டேப் அவுட் முறையில் ஜான் சீனா தோல்வியை தழுவினார். இதைத் தொடர்ந்து தோல்வியுடன் ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரை WWE நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் வழியனுப்பினர். அடுத்த கட்டமாக ஜான் சீனா தனது முழு கவனத்தையும் சினிமா துறையில் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
