ஆர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு பூஜை
ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இவர் தற்போது 'மிஸ்டர் எக்ஸ்' எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ‘சர்பட்டா’ இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார். ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் 40வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்யாவின் பிறந்தநாளான நேற்று அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை நடைபெற்றது. Thank u everyone for the lovely birthday wishes Truly Grateful and blessed ❤️With all ur love and blessing starting with my next #Arya40 A RomCom after #RajaRani Details soon @sayyeshaa @tkishore555 @gvprakash @NikhilMuraly @JeevaSankar @onlyartmohan @jyothishnairm… pic.twitter.com/zkNDGEgO7Uநிகில் முரளி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், “ராஜா ராணி படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவின் காதல் படத்திற்கு இசையமைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.After #rajarani doing a love film musical for @arya_offl …. #arya40 …. ❤️ pic.twitter.com/25MvwHAzd0இதன்மூலம் காதல்கதையை மையமாக கொண்ட படம் என தெரிகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
