ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
சென்னை, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த அதே நேரத்தில், வெள்ளி விலையும் அசூர வேகத்தில் அதிகரித்தது. கடந்த அக்டோபர் மாதம் வரை ‘கிடுகிடு'வென உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை கடந்த மாதம் சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை இருக்கிறது. அந்த வகையில் தங்கம் விலை ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் அப்படியே இருந்து வந்தது. வெள்ளி விலையோ, ‘டாப் கியர்' போட்டு பறக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் அதிகரித்திருந்த சூழலில், நேற்றும் விலை உயர்ந்து காணப்பட்டதை பார்க்க முடிந்தது. நேற்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இது, இதுவரை இல்லாத புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனதுதான் உச்சபட்சமாக இருந்தது. தற்போது அதனை தாண்டி, வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது. வெள்ளி ஆபரண உலோகமாக மட்டுமல்லாமல், தொழில்துறை தேவை சார்ந்த உலோகமாக அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து வருகிறது. தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இந்நிலையில் தங்கம் விலை இன்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.சரி மாலையில் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், நகைபிரியர்களுக்கு பேரிடியாக தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,370க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1,600 உயர்ந்த நிலையில் மாலை ரூ.960 உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.216க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து கிலோ ரூ.2.16 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
