ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 171 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி...!
துபாய், 12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். மாத்ரே 4 ரன்னில் அவுட் ஆன நிலையில் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரக வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த சூர்யவன்ஷி சதம் விளாசினார். அவர் 95 பந்துகளில் 14 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 171 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி இந்தியா 46 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
