“பராசக்தி” படத்தின் 3வது பாடலின் புரொமோ வெளியீடு

  தினத்தந்தி
“பராசக்தி” படத்தின் 3வது பாடலின் புரொமோ வெளியீடு

சென்னை, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. முதல் பாடலான ‘அடி அலையே’ , 2வது பாடலான ‘ரத்னமாலா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் 3-வது பாடலின் புரொமோ வெளியாகியுள்ளது. ‘நமக்கான காலம்’ பாடல் வரும் 14ம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை கல்யாண் வரிகளில் ஹரிசரண், நகாஷ் அஜீஸ், வேல்முருகன் ஆகியோர் பாடியுள்ளனர்.Calls for a celebration ❤️‍'Namakkana Kaalam' - third single from #Parasakthi releasing on December 14th!A @gvprakash musical https://t.co/eImhwxaGq5#ParasakthiFromPongal#ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash… pic.twitter.com/GMHBpEZmUX

மூலக்கதை