ஹாலிவுட் படத்தில் “துப்பாக்கி” பட நடிகரின் புதிய தோற்றம்
இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால், தமிழில், துப்பாக்கி, அஞ்சான், ‘மதராஸி’ படங்களில் நடித்துள்ளார். இவர் ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்ற ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் நடிப்பதை ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இவருடன் ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா ஆகியோர் நடிக்கின்றனர் என்றும் இந்த படம் கேப்காமின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறப்பட்டது. களரி உள்ளிட்ட ஏராளமான தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற நடிகர் வித்யூத் ஜம்வாலின், ஆக்சன் காட்சிகளுக்காகவே அவருக்குத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த நிலையில், “‘ஸ்ட்ரீட் பைட்டர்’ எனும் புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் வித்யூத் ஜம்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், தல்சிம் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதை சிறப்பு போஸ்டர் வெளியிட்டு படக்குழு இன்றுஉறுதி செய்துள்ளது.PUSH START. Here’s a sneak peek of #StreetFighterMovie, hitting theaters everywhere October 16, 2026. pic.twitter.com/y1L5ixbFem‘ஸ்ட்ரீட் பைட்டர்’ திரைப்படத்தில் பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2026-ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் என்று பாரமவுண்ட் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.A post shared by Street Fighter (@streetfightermovie)




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
