கவுதம் ராம் கார்த்திக் படப்பிடிப்பை துவக்கி வைத்த மாரி செல்வராஜ்
நடிகர் கவுதம் கார்த்திக் கடல் படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படமாகின. இதற்கிடையே, நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்துகொண்டார். இவர் நடிக்கும் ‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. கணேஷ் கே. பாபு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜி.ஆர்.கே 19’ என்ற தற்காலிகப் பெயரிடப்பட்ட படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. புகழ்பெற்ற திரைப்படத் இயக்குனர் மாரி செல்வராஜ் முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, முழு குழுவினருக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்து, முதல் ஷாட் கிளாப் அடித்து படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அவரது வருகை மற்றும் பாராட்டு, ‘ஜி.ஆர்.கே 19’ குழுவினருக்கு மிகுந்த ஊக்கத்தை சேர்த்தது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தங்களை வாழ்த்தியதற்கு இயக்குனர் மாரி செல்வராஜுக்கு படக்குழுவினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர. இப்படத்தில் கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.First day. First shot. And a creator we deeply admire walked in with his blessings.Honoured to have Director @mari_selvaraj Sir on the sets of @Gautham_Karthik’s #GRK19 pic.twitter.com/gcT9usCYfB




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
