பொன்ராமின் “வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2” படத்தின் அப்டேட்
பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘கொம்புசீவி’. வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக அளித்த பேட்டியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இது இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பேட்டியில் இயக்குநர் பொன்ராம், “‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ 2-ம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான கதையும் தயாராக உள்ளது. சிவகார்த்திகேயனின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை மனதில் வைத்து கதையில் சில மாற்றங்களை செய்து வருகிறேன். அனைத்தும் தயாரானவுடன், சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டால் அப்படத்தினை தொடங்குவோம். அடுத்ததாக முழுக்க காமெடியை முன்னிலைப்படுத்தி படமொன்றை இயக்கி வருகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி இணைந்து ‘ரஜினிமுருகன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘சீமராஜா’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. இத்திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
