விராட், ரோகித் சர்மாவின் சம்பளம் குறைப்பு..? பி.சி.சி.ஐ. திட்டம்
மும்பை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வீரர்களை ஏ+, ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ+கிரேடில் இருப்பார்கள். சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். டி20 மற்றும் டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர். இந்நிலையில் இருவரையும் ஏ+ கிரேடில் இருந்து ஏ வரிசைக்கு தரமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏ+ வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஏ கிரேடுக்கு செல்லும் பட்சத்தில் அவர்களின் ஊதியம் ரூ.7 கோடியிலிருந்து ரூ. 5. கோடியாக குறையும். அதே நேரத்தில் ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் டெஸ்டில் விளையாடுவதால் ஏ+ கிரேடில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ.-ன் வருடாந்திர பொதுக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மறுபுறம் 3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ+ கிரேடுக்கு முன்னேற உள்ளதாக கூறப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
