‘அனைவரையும் நிலவுக்கு அனுப்பி விடலாமா?’ - நிலநடுக்கம் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு
புதுடெல்லி, இந்தியாவில் 75 சதவீத நிலப்பரப்பு நிலநடுக்க பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருப்பதாகவும், இதனை எதிர்கொள்ள தகுந்த முன்னேற்பாடுகளை செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி சந்தீப் மெஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், முன்பு டெல்லி மட்டும்தான் அதிக நிலநடுக்க அபாயம் கொண்ட பகுதியாக கருதப்பட்டது, ஆனால் சமீபத்திய ஆய்வுகளின்படி சுமார் 75 சதவீத இந்திய நிலப்பரப்புக்கு இந்த அபாயம் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் மனுதாரரிடம், “அப்படியென்றால் அத்தனை பேரையும் நிலவுக்கு அனுப்பி விடலாமா?” என்று கேட்டனர். இதற்கு மனுதாரர் தரப்பில், சமீபத்தில் ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது நீதிபதிகள், “இந்த நாட்டிற்கு முதலில் எரிமலைகளை கொண்டு வர வேண்டும். அதன் பிறகு ஜப்பானுடன் நாம் ஒப்பீடு செய்யலாம்” என்றனர். மேலும், எதிர்காலத்தில் நிலநடுக்கம் ஏற்படும் சமயத்தில் பாதிப்பை கட்டுப்படுத்த முன்னேற்பாடுகளை செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் விடுத்த கோரிக்கைக்கு, “அதை அரசாங்கம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும். கோர்ட்டு எதுவும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
