குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து - 5 பேர் படுகாயம்
காந்திநகர், குஜராத் மாநிலம் வல்சாட் நகரில் உள்ள அவுரங்கா ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வல்சாட் நகரை அருகில் உள்ள கிராமங்களுடன் இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு, ரூ.42 கோடி மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் கட்டுமானப் பணியை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வழக்கம்போல் பாலத்தின் கட்டுமானப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் இரண்டு தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 5 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வல்சாட் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் ஏற்பட்ட சேதத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
