“சூப்பர் ஸ்டார்” ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை, தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- "இன்று பிறந்த நாள் காணும் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞர் அவர்களின் அன்புக்குரியவர் - தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அருமை நண்பர் - என் மீதும் எப்போதும் தனிப்பாசம் கொண்டிருப்பவர். 75-ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்து, பவள விழாவையும் - திரையுலகில் பொன் விழாவையும் காணும் ரஜினி சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும். இந்திய திரையுலகில் அன்றைக்கும் - இன்றைக்கும் முன்வரிசையில் ஒளிரும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார், தொடர்ந்து நம்மை மகிழ்விக்கட்டும். அவர் இன்னும் பல்லாண்டு நல் ஆரோக்கியத்துடன் மகிழ்ந்திருக்க விழைகிறேன்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
