வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி
வெல்லிங்டன், நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் நிறைவடைந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து 73 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் 18ம் தேதி தொடங்க உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
