முன்னாள் மத்திய உள்துறை மந்திரி காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்
மும்பை,மராட்டிய மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் (வயது 90). இவர் 2004 முதல் 2008 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை மந்திரியாக செயல்பட்டுள்ளார். அதேபோல், இந்தியா காந்தி, ராஜீவ் காந்தி தலைமையிலான அரசுகளில் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். மேலும், 1991 முதல் 1996 வரை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகவும், 2010 முதல் 2015வரை பஞ்சாப் மாநில கவர்னராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில், வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார். மராட்டியத்தின் லட்டூரில் உள்ள வீட்டில் சிவராஜ் பாட்டீல் இன்று காலமானார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மூத்த அரசியல் தலைவர் சிவராஜ் பாட்டீலை நாம் இழந்துவிட்டோம். சிவராஜ் தனது நீண்ட பொதுவாழ்வில் மக்களவை சபாநாயகர், மத்திய மந்திரி, கவர்னர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், சிவராஜ் பாட்டீல் மறைவால் மிகுந்த சோகமடைந்தேன். மிகவும் நீண்ட காலம் அரசியல் அனுபவம் பெற்ற அவர் எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய மந்திரி, மராட்டிய சபாநாயகர், மக்களவை சபாநாயகர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
