கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு பதிவாளரை சேர்க்க வேண்டும் - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த அக்டோபர் 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சி.பி.ஐ. விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஐகோர்ட்டு அமைத்த எஸ்.ஐ.டி.யும், மாநில அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையமும் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு பதிவாளரை சேர்க்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் கூட்டங்களை நடத்துவதற்கான விதிமுறைகளை வகுக்கவே ஆணையம் அமைக்கப்பட்டது என்றும் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். ஆணையத்தின் நோக்கத்தை கேட்டறிந்த சுப்ரீம்கோர்ட்டு, தமிழக அரசின் கோரிக்கையை உடனடியாக ஏற்க மறுத்துவிட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையின்போது நீதிபதி, “கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை தனி நீதிபதி எப்படி விசாரித்தார்..? சென்னை ஐகோர்ட்டில் நடப்பது எதுவும் சரியாக இல்லை” என்று கூறினார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் பதில் மனு, விளக்க மனு உள்ளிட்டவை அனைத்தையும் சேர்த்து ஜனவரியில் விசாரிப்பதாக கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
