போதையில் யூ-டியூப் பார்த்து அறுவை சிகிச்சை; போலி டாக்டரால் பெண்ணுக்கு நடந்த கொடூரம்
லக்னோ, உத்தர பிரதேசத்தின் பாராபங்கி நகரில் வசித்து வந்தவர் முனிஷ்ரா ராவத். இவருடைய கணவர் பதே பகதூர். இந்நிலையில், ராவத்துக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் நகரில் உள்ள அங்கீகாரம் இல்லாத ஸ்ரீ தாமோதர் அவுஷதாலயாவுக்கு, மனைவியை பகதூர் அழைத்து சென்றிருக்கிறார். கிளினிக்கின் உரிமையாளர்களாக ஞான பிரகாஷ் மிஷ்ரா மற்றும் விவேக் மிஷ்ரா இருந்துள்ளனர். பெண்ணின் வலிக்கு சிறுநீரக கல்தான் காரணம். அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகும் என பிரகாஷ் கூறினார். பின்பு, ரூ.20 ஆயிரம் வரை பேரம் பேசி ஒப்பு கொள்ளப்பட்டது. அடுத்த நாள் யூ-டியூப் பார்த்தபடி பிரகாஷ் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளார். அப்போது போதையில் இருந்துள்ளார். இதனால், பெண்ணின் வயிற்றில் உள்ள பல்வேறு நரம்புகளை கத்தரித்து இருக்கிறார். இதில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அடுத்த நாள் அதிக வலியால் அலறி, துடித்த ராவத் உயிரிழந்து விட்டார். இதுபற்றி பகதூர் போலீசில் புகார் அளித்து உள்ளார். போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ராவத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிளினிக் உரிமையாளர்கள் இருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி உயரதிகாரி அமித் சிங் பதூரியா கூறும்போது, சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், கிளினிக்கில் ஆய்வு செய்ய சென்றோம். கிளினிக்கில் இருவரும் இல்லை. அவர்கள் தப்பியோடி விட்டனர். அவர்களை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்தனர். உத்தர பிரதேசத்தில், போலி டாக்டர் போதையில் யூ-டியூப் பார்த்தபடி அறுவை சிகிச்சை செய்ததில் பெண் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
