எனது சாதனையை ரோகித் சர்மா முறியடித்ததில் மகிழ்ச்சி - பாக்.முன்னாள் கேப்டன்
கராச்சி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் நொறுக்கியவரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் (351 சிக்சர்) 15 ஆண்டுகால சாதனையை சமீபத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா முறியடித்தார். இந்நிலையில் தனது சாதனையை உடைத்த ரோகித் சர்மாவை அப்ரிடி பாராட்டியுள்ளார். இது குறித்து அப்ரிடி அளித்த ஒரு பேட்டியில், “ஒருநாள் போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்தவர் என்ற சாதனை கிட்டதட்ட 18 ஆண்டுகள் என்னிடம் இருந்தது. ஆனால் இறுதியில் அது முறியடிக்கப்பட்டது. சாதனைகள் என்றாலே முறியடிக்கக்கூடியதுதான். ஒரு வீரர் சாதனையை படைப்பார். இன்னொரு வீரர் அதை தகர்ப்பார். அதுதான் கிரிக்கெட்.இப்போது அதிக சிக்சர் சாதனையை எனக்கு எப்போதும் பிடித்தமான ஒரு வீரர் உடைத்தது மகிழ்ச்சியே. 2008-ம் ஆண்டு முதலாவது ஐ.பி.எல். தொடரில், நானும், ரோகித் சர்மாவும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக இணைந்து விளையாடி இருக்கிறோம். டெக்கான் அணியின் பயிற்சியின்போது அவரது பேட்டிங்கை பார்ப்பேன். அவரது தரம் என்னை வெகுவாக கவர்ந்தது. அப்போதே, அவர் ஒருநாள் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று நினைத்தேன். அது போலவே அவர் தன்னை ஒரு தரமான பேட்டர் என்பதை நிரூபித்து காட்டினார்” என்று கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
