அபுதாபி சென்ற விமானம்: நடுவானில் பணியாளருக்கு திடீர் உடல் நலக்குறைவு - உயிரை காப்பாற்றிய தமிழக மருத்துவர்கள்
அபுதாபி, எத்தியோப்பியாவில் இருந்து அபுதாபிக்கு வரும்போது நடுவானில் விமான பணியாளருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது விமானத்தில் பயணம் செய்த 2 தமிழக மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்றினர். எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அப்பா நகரில் இருந்து அபுதாபிக்கு எதிகாத் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கோபிநாதன் மற்றும் சுதர்சன் பாலாஜி ஆகியோரும் இந்த விமானத்தில் பயணம் செய்தனர். விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பணியாளர்கள் பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்தி வந்தனர். அப்போது ஆண் பணியாளர் ஒருவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனை பார்த்த மற்ற பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். விமான பணியாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த தமிழக மருத்துவர்கள் அவருக்கு மருத்துவ உதவிகளை அளித்தனர். பாதிக்கப்பட்ட பணியாளருக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் இருப்பதை கண்டறிந்த அவர்கள் விமானத்தில் இருந்த கையடக்க சிலிண்டர் மூலம் அவருக்கு ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்தனர். இதைத்தொடர்ந்து பணியாளர் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் இருவரும் கண்காணித்து வந்தனர். அபுதாபி சர்வதேச விமான நிலையம் வந்ததும் அந்த பணியாளரை மருத்துவ குழுவினர் பத்திரமாக சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். விமானத்தில் பணியாளருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தன்னார்வத்துடன் தமிழக மருத்துவர்கள் மருத்துவ சேவைகளை வழங்கியதற்கு மற்ற பணியாளர்களும், பயணிகளும் பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
