டிரம்பின் புதிய விசா திட்டம்: ரூ.9 கோடி இருந்தால் யாரும் அமெரிக்க சிட்டிசன் ஆகலாம்
வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக குடியேற்றத்துக்கு கடும் கட்டுபாடுகளை விதித்தார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கும் கட்டுபாடுகளை கொண்டு வந்தார். இதற்கிடையே அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற கோல்டு கார்டு(தங்க அட்டை) விசா திட்டம் கொண்டு வரப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார். 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.44.98 கோடி) செலுத்தினால் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்றும் இதற்கான நடைமுறைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதன்பின் கோல்டு கார்டு விசாவுக்கான கட்டணத்தை குறைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் 1 மில்லியன் டாலர் செலுத்தும் தனிநபர்களுக்கும், வெளிநாட்டு ஊழியருக்கு ௨ மில்லியன் டாலர் செலுத்தும் நிறுவனங்களுக்கும் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோல்டு கார்டு விசா திட்டத்தை டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கோல்டு கார்டு விற்பனையை டிரம்ப் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் வெளிநாட்டினர் அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.8.98 கோடி) நன்கொடை. வழங்குவதன் மூலம் நிரந்தரமாக அந்தஸ்தைப் (அமெரிக்க சிட்டிசன்) பெறுவார்கள்.இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:- 'கோல்டு கார்டு விசா என்பது ஒரு கிரீன் கார்டு போன்றது. ஆனால் கிரீன் கார்டை விட பெரிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும் "அமெரிக்க அரசாங்கத்திற்கே செல்லும். பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத்துறையால் நிர்வகிக்கப்படும். ஒரு கணக்கில் வந்து சேரும். இதன்மூலம் நாம் நாட்டிற்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்ய முடியும். இந்தத் திட்டம் பெருநிறுவனங்கள், சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற திறமையாளர்களைப் பணிய மர்த்தித் தக்கவைத்துக் கொள்ள உதவும் என்றார். அமெரிக்காவின் மற்ற விசாவை போலவே, தேசிய பாதுகாப்பு அல்லது குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம்.21 வயதுக்குட்பட்ட வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் திருமணம் ஆகாத குழந்தைகளை விண்ணப்பத்தில் சேர்க்கலாம். ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 15 ஆயிரம் டாலர் செயலாக்கக் கட்டணமும், விசாவை பெற 1 மில்லியன் டாலரும் நன்கொடையாக செலுத்த வேண்டும்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
