உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி: டிரம்ப் கடும் தாக்கு
கீவ், உக்ரைன்–ரஷியா இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நிலப்பரப்பின் 20 சதவீதத்தை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையேயான போரால் பெரும் அளவு உயிரிழப்புகளும் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளன. வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, டிரம்ப் பதவியேற்ற பிறகு அமைதி பேச்சுக்களை விரைவுபடுத்தி வருகிறார். உக்ரைனிடம் கைப்பற்றிய பிரதேசங்களை ரஷியா திருப்பித் தர மறுக்கிறது; இதை உக்ரைன் ஏற்க மறுக்கிறது. இதனால் மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2019-லேயே முடிவடைந்தது. ஆனால் ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் போர் சட்டம் அமலில் உள்ளதால் தேர்தல் தடைப்பட்டுள்ளது. தற்போது, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முன்வைத்த அமைதி திட்டத்துக்கு உக்ரைன் அதிபர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இது குறித்து டிரம்ப் கூறியதாவது: “உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் விவகாரத்தில் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தேர்தல் நடத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அவர்கள் ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அது இனி ஜனநாயகம் இல்லாத நிலைக்கு செல்கிறது,” என்றார். மேலும், தேர்தலை காலம் தாழ்த்தவே போரை நீட்டிப்பதாகவும் டிரம்ப் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஜெலன்ஸ்கி, “உக்ரைனில் தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும்,” என்றார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
