இலங்கையை மீட்டெடுக்க திரண்ட மிகப்பெரிய நிதி: இழப்பீடு வழங்கும் பணி தீவிரம் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையை மீட்டெடுக்க திரண்ட மிகப்பெரிய நிதி: இழப்பீடு வழங்கும் பணி தீவிரம்  லங்காசிறி நியூஸ்

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில், புயல் வெள்ள பாதிப்புகளால் சிதலமடைந்துள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி கிடைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிதி தொகையானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூலம் கிடைத்து இருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகங்கள் மற்றும் சொத்துகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிதி இழப்பீடுகள் வழங்குவதை அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன. இதன்படி, சிறிய சொத்துக்களுக்கான உடனடி இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான தேவையான தகவல்களை சேகரித்த பின்னரே அவரை வழங்கப்படும் என்றும், இருப்பினும் முதல்கட்ட தொகையை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் தற்போது சம்மதம் தெரிவித்து இருப்பதகாவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை