சற்று உயர்ந்த தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி (ஒரு சவரன் ரூ.97,600) புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று குறைந்திருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து , ஒரு கிராம் ரூ.12,000-க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.320 என குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.96 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை நேற்று ஒரு கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,99,000- க்கு விற்பனையானது. தங்கம் விலை இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,030-க்கும், சவரன் ரூ.96,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.207-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-10.12.2025- ஒரு சவரன் ரூ.96,240 09.12.2025- ஒரு சவரன் ரூ.96,000 08.12.2025- ஒரு சவரன் ரூ.96,320 07.12.2025- ஒரு சவரன் ரூ.96,320 06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320 05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000 04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160 03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480 02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320 01.12.2025- ஒரு சவரன் ரூ.96,560




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
