தங்கம் விலை இன்று குறைவு: சென்னையில் ரேட் என்ன?

  தினத்தந்தி
தங்கம் விலை இன்று குறைவு: சென்னையில் ரேட் என்ன?

சென்னை, சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​றது. அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது அந்த வகையில் தங்கம் விலை இன்று சரிந்துள்ளது. சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து , ஒரு கிராம் ரூ.12,000-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.320 என குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,99,000- க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம் 08.12.2025- ஒரு பவுன் ரூ.96,320 07.12.2025- ஒரு பவுன் ரூ.96,320 06.12.2025- ஒரு பவுன் ரூ.96,320 05.12.2025- ஒரு பவுன் ரூ.96,000 04.12.2025- ஒரு பவுன் ரூ.96,160 03.12.2025- ஒரு பவுன் ரூ.96,480 02.12.2025- ஒருபவுன் ரூ.96,320 01.12.2025- ஒரு பவுன் ரூ.96,580 30.11.2025- ஒரு பவுன் ரூ.95,840 29.11.2025-ஒரு பவுன் ரூ.95,840

மூலக்கதை