கொழும்பு துணிக்கடையில் ரகசிய கேமரா: கையும் களவுமாக சிக்கிய உரிமையாளர் - லங்காசிறி நியூஸ்
கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள துணிக்கடையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொழும்பின் புறநகர் தலவதுகொடையில் உள்ள துணிக்கடை ஒன்றின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட உரிமையாளரின் துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டதை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தலங்கம பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.கைதுக்கு பிறகு சந்தேக நபரின் கைப்பேசியை சோதனையிட்ட பொலிஸார், திடுக்கிடும் வகையில் உடை மாற்றும் அறையில் மறைத்து வைத்து பதிவு செய்யப்பட்ட 201 காணொளிகளை பொலிஸார் கண்டுபிடித்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த 201 வீடியோக்களில், பெண்கள், சிறுமிகள், இளம் பெண்கள் ஆகியோரின் உடை மாற்றும் காட்சிகள் இருந்ததாகவும், வீட்டின் குளியலறையில் பெண் ஒருவர் குளிக்கும் வீடியோ ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கைப்பற்றப்பட்ட காட்சிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளதா அல்லது உள்ளூர் அல்லது வெளிநாட்டு வலைதளங்களுக்கு விற்கப்பட்டு உள்ளதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
