வெள்ளத்தில் சேதமடைந்த அரிசிகள் சட்டவிரோதமாக விற்பனை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை - லங்காசிறி நியூஸ்
வெள்ளத்தில் சேதமடைந்த அரிசியை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இலங்கையை மழை வெள்ளம் புரட்டி போட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் பாழடைந்த அரிசி வகைகள் சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்டு சந்தையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தை பொது சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த சேதமடைந்த அரிசிகள் மனித பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கண்டி மாவட்டத்தின் ஹரிஸ்பத்துவ பகுதியில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1,000 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட அரிசி பறிமுதல் செய்ததாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்தார்.இந்நிலையில், நாடு முழுவதும் இது போன்ற சட்ட விரோதமான செயல்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், எனவே யாரும் இது போன்ற முறைகேடான செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பொதுமக்கள் அரிசி வாங்கும் போது, விழிப்புடன் செயல்படுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் இது போன்ற குற்றச் செயல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க சுகாதார அமைச்சகத்தின் பேரிடர் முகாமைத்துவப் பிரிவின் 24 மணி நேர துரித இலக்கமான 1926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
