இலங்கையை உலுக்கிய பேரிடர்: மீட்க களமிறங்கும் பல சர்வதேச நாடுகள் - லங்காசிறி நியூஸ்
பேரிடர் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவி செய்ய பல நாடுகள் முன்வந்துள்ளன. இலங்கையில் வெள்ளம் மற்றும் பேரிடர் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில், அமெரிக்கா இரண்டு விமானங்களில் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். இதற்காக அமெரிக்கா தங்களுடைய இரண்டு C1 30 சரக்கு விமானங்களை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மீட்பு பணிகளுக்காக பல ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கி இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். டித்வா புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக இலங்கை மிகவும் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது, இருப்பினும் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களை பாதுகாக்க பல சர்வதேச அமைப்புகள் உதவ வந்துள்ளதாக சம்பத் கொட்டுவேகொட குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் பல நாட்டு அதிகாரிகள் மீட்பு பணிகள் மற்றும் உதவிகள் தொடர்பாக தொடர்ந்து பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு பிரான்ஸ், போலந்து, ஜெர்மனி மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தந்து, நாட்டு மக்களுக்கு தேவையான உதவியை வழங்க தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
