இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர்  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் டித்வா புயலில் வாழ்வாதாரத்தை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல கோடி மதிப்புள்ள காணியை ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். ஷியாம் டயஸ் என்ற அந்த நபர் ஜாஎல பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.4 கோடி ரூ மதிப்புள்ள 24 பேர்ச் காணியை இலங்கை மக்களுக்கு வழங்குவதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் ஷியாம் டயஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்த தகவலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய நிலத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திற்கு இந்த காணியை வழங்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் வீட்டுத் தொகுதியை அமைப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு தங்க வைக்க முடியும் என்றும்  ஷியாம் டயஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்பகுதியில் ஒரு பேர்ச் காணி ரூ. 23 லட்சம் வரை விற்பனை செய்ய முடியும் என்றும், இதனை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதுவே எனக்கு நிம்மதி என்றும் ஷியாம் டயஸ் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை