இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் டித்வா புயலில் வாழ்வாதாரத்தை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல கோடி மதிப்புள்ள காணியை ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். ஷியாம் டயஸ் என்ற அந்த நபர் ஜாஎல பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார்.4 கோடி ரூ மதிப்புள்ள 24 பேர்ச் காணியை இலங்கை மக்களுக்கு வழங்குவதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் ஷியாம் டயஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்த தகவலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய நிலத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திற்கு இந்த காணியை வழங்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் வீட்டுத் தொகுதியை அமைப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு தங்க வைக்க முடியும் என்றும் ஷியாம் டயஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்பகுதியில் ஒரு பேர்ச் காணி ரூ. 23 லட்சம் வரை விற்பனை செய்ய முடியும் என்றும், இதனை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதுவே எனக்கு நிம்மதி என்றும் ஷியாம் டயஸ் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
