இலங்கைக்கு அனுப்பப்பட்ட பாகிஸ்தான் ராணுவம்: வேகமெடுக்கும் மீட்புப் பணி - லங்காசிறி நியூஸ்
டித்வா புயல் பேரிடர் மீட்புக்காக பாகிஸ்தானின் சிறப்பு மீட்பு குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.இலங்கையை புரட்டி போட்டுள்ள டித்வா புயலால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அழிவை தொடர்ந்து, மீட்பு பணிகளை தீவிரப்படுத்துவதற்காக பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் முகம்மது ஷஹ்பாஸ் ஷரீப்பின் உத்தரவின் படி, பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்பு தேடல் மற்றும் மீட்பு குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை அரசின் கோரிக்கையின் அடிப்படையில், பாகிஸ்தான் அரசு இலங்கைக்கான மனிதாபிமான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. மேலும், 47 பேர் கொண்ட சிறப்பு அணி மற்றும் 6.5 தொன் அவசியமான மீட்பு உபகரணங்களுடன் பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கடற்படை கப்பல்களும், உலங்கு வானூர்திகளும் ஏற்கனவே இலங்கையில் மீட்பு பணிகளை தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு ஏற்ப பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக மாற்றீட்டு பணிகளுக்காக பாகிஸ்தான் ராணுவம் தற்காலிக பாலங்களையும் அனுப்பவுள்ளது. அத்துடன் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம் என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
