அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

  தினத்தந்தி
அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி (ஒரு சவரன் ரூ.97,600) புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன் தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,070-க்கும், சவரன் ரூ.96,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று தங்கம் விலை சற்று குறைந்திருந்தது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்று ஒரு கிராம் ரூ.196-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. முதலீட்டாளர்களின் கவனம் ஒரு நாள் தங்கத்தின் பக்கமும், மறுநாளில் பங்கு சந்தைகள் பக்கமும் மாறி மாறி செல்வதால் இந்த நிலை நீடிக்கிறது. தங்கம் விலை இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,060-க்கும், சவரன் ரூ.96,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.201-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 03.12.2025 ஒரு சவரன் ரூ.96,480 (இன்று) 02.12.2025 ஒரு சவரன் ரூ.96,320 (நேற்று) 01.12.2025 ஒரு சவரன் ரூ.96,560 30.11.2025 ஒரு சவரன் ரூ.95,840 29.11.2025 ஒரு சவரன் ரூ.95,840 28.11.2025 ஒரு சவரன் ரூ.94,720

மூலக்கதை