அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு
புதுடெல்லி, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் இன்று தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக, வருகிற 5-ந்தேதி வட்டி விகிதம் தொடர்பான முடிவு வெளியிடப்படும். இந்த சூழலில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவடைந்து உள்ளது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது. எனினும், அது விரைவில் ரூ.90.13 என வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்தது. இதற்கு முன் நிறைவடைந்த வர்த்தகத்தின்போது, அது ரூ.89.87 என்ற அளவில் இருந்தது. இதுபற்றி அந்நிய செலாவணி நிறுவனம் ஒன்றின் மேலாண் இயக்குநரான அமித் பபாரி என்பவர் கூறும்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் ரூ.88.90 முதல் ரூ.90.20-க்கு இடைப்பட்ட அளவில் இருக்கும். ரூ.89-க்கு கீழ் வருவது என்பது, இறுதியாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவில் இருந்து மீண்டு, மீண்டும் வலுவடைவதற்கான உண்மையான முதல் அறிகுறியாக இருக்கும் என நேர்மறையாக கூறினார். டாலர் குறியீடு பலவீனமடைந்திருந்தபோதும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தடைபட்ட நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
